சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம்
நம் தாதி பிதாவின் திருப்பாலர்
இவர்
அனுகூலர் இவர் மனுவேலர் இவர்
நேய கிருபையின் ஒரு சேயர்
இவர்
பரம ராயர் இவர் நம தாயர் இவர்
ஆதிநரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார்
சொந்தமாய்
ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர்
கூடவே
மெய்யாகவே மேசையாவுமே
நம்மை நாடினாரே கிருபை
கூறினாரே
அருளானந்த மோட்ச வழி
காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி
சூட்டினாரே
إرسال تعليق